Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

புத்தாண்டு 2017 - சிறுகதை

31:12:2016, சென்னை போன்ற பெருநகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் . சரி ஈசிஆர் ரோட்டில் ஹோடாடல் அல்மரா . மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. இது போன்ற கொண்டாட்டங்களுக்கு பிரசித்தி பெற்ற இடம் அல்மரா. அதன் உயிரோட்டமுள்ள பகுதிகளில் கிளப் டான்ஸ் வருடா வருடம் நடக்கும்.

எனக்கு இம்மாதிரியான கேளிக்கைகள் புதிது. பலமுறை பார்த்திருந்தாலும் சிலமுறை பழகியிருந்தாலும் புதிது. கிளப் டான்ஸ்தளம் பூமிக்குள் இருந்தது. பழங்கால உவமான கதைகளின் பாதாள உலகம் என்பதுபோல. உள்ளே நுழைந்த எனக்கு அந்த இருளடிக்கும் வெளிச்சத்தில் சரியான பார்வை என்பதற்கு வாய்ப்பில்லை. இங்கு உடைகளையும் சில அங்கங்களையும் தவிர ஆண்/பெண் பேதமில்லை..

ஒரு பெரிய மாநாட்டின் நிறைந்த கூட்டத்தின் ஒரு பங்குமக்கள் இந்த விசால அறையின் நடனதரையை மட்டும் தங்களால் இயன்றவரை நெருக்கிகொண்டு நிரப்பியிருந்தனர். நெரிசலில் அவர்கள் உரசிகொண்டு ஆகும் நடனம் நல்ல வெளிச்சத்தில் காண சகிக்காது. இந்த இருளே பரவாயில்லை. நெரிசலில் நசுக்கபட்டு என் முயற்சியால் ஒரு பாதி கடந்தேன் மறுபாதி அவர்களால் கொண்டுவிடபட்டேன்.

சற்றே நீண்ட விசாலமான ரிசெப்ஷன் மேசை எதிர்புறம் ரிப்பன் சால்ட பேண்ட்டும். பீட்டர் இங்க்லாண்ட் சர்ட்டும் ;ரிச்மன் பட்லர் கோட்டும் அணிந்த ஆசாமி வாட் கேன் ஐ சர்வ் பார் யூ சர் என்றான். வாட் ஷல் ஐ என்றிருக்க வேண்டும்.

ஒன் டொனால்ட் சிக்னேச்சர் மீடியம். என்றேன்.ஒன் டொனால்ட் ஸ்ட்ராங் என்றான் பக்கத்து வந்தமர்ந்த ஆசாமி இருவரது ஆர்டரையும் பெற்றுகொண்டு அந்த ஆசாமி உள்ளே போனான் . என் பேண்ட்டின் பின் பாக்கட்டை தடவினேன்  நல்லபடியாக கூட்டத்தில் என் பர்ஸ் தப்பித்திருக்கிறது .
ஹலோ என்றான் பக்கத்தவன். நானும் ஹலோ . ஹேப்பி நியூ இயர் என்றார். நானும் ஹேப்பி நியூஇயர் எனறேன். எனக்கு இந்த விஸ்யூத சேம் என்பதில் விருப்பமில்ல வார்த்தைக்கு பஞ்சமென்பது போல உணர்கிறேன் அதை. ஷல் ஐ டேக் யூ ஆஸ் மை கம்பனி? என்றான். வித் ப்ளசர் என்றேன் நான். இந்த ஆண்டின் இறுதி சில மணிகளில் மலர்ந்தது எங்கள் நட்பு. எனக்குவந்த சிக்னேச்சரில் அவன் ஐஸ் க்யூப்களை போட்டு சீயர் யுவர் ட்ரிங்க் என்றான் நான் வாங்கிகொண்டு;யுடூ ஹேவ் யுவர்ஸ் என்றேன்.

5 சிப்களுக்குபின். கேன் ஐ நோ யுவர் ஸ்வீட் நேம் என்றான். நான் மோகன் ஒரு எம்என்சியில் டீம் லீடர் என்றேன். அவன் நான் ரிஷி . நாட் வொர்க்கிங் ஜஸ்ட் செலிபிரேட்டிங் மை லைப்.அப்புறம் செலவுக்கு பணம்? அப்பா மினிஸ்டர் அதுக்கு அப்புறம் உங்களுக்கே தெரியுமே என்றான். புரிந்தது. எங்களுக்கான அடுத்த சர்வ் வந்தது. நான் சர்வ் பண்றேன் என்றேன். சரி என்றான்.

ஹே ஹனி வாட் ஆர்யூ டூயிங்தேர் கம் லெட்ஸ் டான்ஸ் என்றுஅவன் தோளில் சாய்ந்தபடி ஒரு பெண் சொல்ல. எஸ்க்யூஸ்மீ  மோகன். ஐவில் பேக் ஆன் 2 மினிட்ஸ் என்று நடனமாட சென்றான். நான் எனது சிக்னேச்சர் லார்ஜ்லும் அவனது ஸ்ட்ராங்கிலும் இன்னும்கொஞ்சம் சோடாவை சேர்த்தேன். எனது லார்ஜில் இரண்டுசிப்கள் விழுங்கியிருக்க. வந்தவன் சாரி பார்த லேட் என்றான். பரவாயில்லை எடுத்துக்கங்க. தேங்க்யூ என்றபடி நான்கு சிப்கள் விழுங்கினான். ப்ளேட்டை பார்த்து என்னது மாத்திரையா இருக்கு என்றான். நான் சால்ட் டேப்லட்ஸ் சைடிஸ்காக என்றேன். என் தட்டிலிருந்து ஆறுடேப்ல்டகளை ஒன்றாக விழுங்கினான்.பணக்கார வர்க்க குணமது அடுத்தவன்  தட்டில் அள்ளிதின்பதும் தனது தட்டில் எண்ணி தின்பதும் ..

அந்த பொண்ணு யாரு? னு கேட்டேன். இன்னிக்கான காதலி என்றான். அப்போ நாளைக்கு?.  வேற யாரோ. லைப் இல் ஒன்ஸ் பிரண்ட் ஐஸ்ட் என்ஜாய் என்றான். எந்த பொண்ணும் உங்கள கேட்கமாட்டாங்களா? இதுவரைக்கும் கேட்டதில்ல எல்லாம் பணம் பாஸ் என்றான். ஒரே ஒருத்திதான் இடியட் காசவாங்கிட்டு போடின்னா கல்யாணம் பண்ணுனு தொந்தரவு பண்ணா;கர்ப்பமா இருக்கேன்னா. பேசிக்கொண்டே முழு லார்ஜயும் குடித்து பின் வெறும் சோடாவையும் குடித்து. என் தட்டிலிருந்த 25 டேப்லட்களையும் தின்றிருந்தான். நான் எனது லார்ஜின் இறுதி 5 சிப்களுக்குள் இருந்தேன்.

அப்புறமா என்னாச்சு? என்ன ஆச்சா அவ கோர்ட்டுக்குபோனா ஜட்ஜ்க்கு பணம் கொடுத்தேன் கேஸ் நிக்கல கடைசில அவ தற்கொலை பண்ணிக்கிட்டா  சில்லி கேர்ள்  இங்க பணம் இருந்தா எந்த தப்பும் பண்ணலாம் பிரண்ட் என்றபடி என் தட்டின்கடைசி டேப்லட்களையும் விழுங்கினான். அப்புறம் பிரண்ட் அவங்க ரிலேட்டிவ்ஸ் யாருமே கேட்கலயா? ம் ஒருத்தன் மட்டும் யாருனு தெரியல போன்ல கொன்னுடுவேன்னு மிரட்டினான் அவன்பேரு கூட உங்க பேருதான் பிரண்ட். என்ன போதை அதிகமாயிருச்சோ ? ரொம்ப திணறுது பிரண்ட் .. ரிஷி  என்னாச்சு? ஒன்னுமில்ல லைட்டா கேரா இருக்கு மிஸ்டர் உங்க பேரு என்ன? மோகன் நான்தான்  அந்த போன்ல மிரட்டின மோகன் . நீங்க குடிச்ச லார்ஜ்ல சோடாவுக்கு பதிலா வினிகர கலந்த மோகன் . சால்ட் டேப்லட்னு சாப்டியே அத்தனையும் தூக்கமாத்திரை அதெல்லாம் வியித்துல வினிகரோட கலந்து சைனைடா மாறிடிச்சு . இனிமேலயாவது  அந்த பொண்ணுங்களுக்கு புத்தாண்டு பிறக்கட்டும்...

என்னாச்சு சர் என்றுவந்தான்சர்வர் ஆசாமி. சர் இந்த சால்ட் டேப்லட்ட சாப்பிட்டாரு திடீர்னு கீழவிழுந்துட்டாரு. என்று அவனது தட்டிலிருந்த சால்ட் டேப்லட்டை காட்டினேன்.சர் இ்ப்ப எதாவதுனா பெரிய பிரச்சனையாகிரும் அப்புறம் பார்டி லைசன்ஸ் போயிரும் . நாங்க இவர பாத்துக்குறோம் நீங்க என்ஜாய் பண்ணுங்க இந்த விசயத்த வெளிய சொல்லிடாதீங்க. என்றபடி அவனது மயக்கஉடலை இழுத்து சென்றான் . மணிசரியாக 11:59.

எனது மனதிலிருந்த கவலை , துக்கம், குரோதம் , தீய எண்ணம். எல்லாம் ஒழிந்து பிறந்து புத்தாண்டு 2017...

இனிய புத்தாண்டு வாழ்துதுக்கள்...This post first appeared on Writer Pavithran Kalaiselvan, please read the originial post: here

Share the post

புத்தாண்டு 2017 - சிறுகதை

×

Subscribe to Writer Pavithran Kalaiselvan

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×