Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கோயில்கள் பழங்காலத்தில் 2

மறுமுறையும் வந்துட்டேன் .. இம்முறை அறிவியலாக பார்க்கவேண்டுமல்லவா... கோயில்கள் எப்படி பழந்தமிழரின் வாழ்வியல் தொழிலியல். மற்றும் கலைகளின் காட்சியிடமோ . அதேபோல் அறிவியலின் தளம் .

பழந்தமிழரின் அறிவியலின் ஆழம் . தினசரி வாழ்வுடன் அறிவியலை ஒத்திசைவு செய்தவிதம் என விளக்கிட பல கோடி விசயங்கள் இறைவனடியில் இறைத்துவிட்டுள்ளனர் நம் முன்னோர்கள்.

முதலில் கோவிலின் இடம். பெரும்பாலும் கோவில்கள் நகரத்தின் மையபகுதியில் அல்லது  மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியில் இயற்கையாகவே அமைந்துவிட்டது.. அல்லது கோயிலிடத்தை சுற்றி நம் மக்கள் வாழ்ந்தனர் என்றும் சொல்லலாம். சரி விசயம் என்னவென்றால். அருகினில் கோயிலிருப்பதால் மக்கள் அதன் தூய்மையை காக்க தம்மையும் தம் சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்திருந்தனர். தூய்மையின் பலன்கள் அனைவரும் அறிந்ததே..  வயற்புற வீட்டினர் கடைபிடித்த தூய்மைக்கும் கோயில்புற வீட்டினர் தூய்மைக்கும் வேறுபாடுண்டு...

ஒரு விதத்தில் இந்த சுற்றுப்புற தூய்மை ஒருவரை அகத்தூய்மை பெற உதவியாய் இருந்ததென கொள்க. கோயிலில் தூய்மையும் அதன் சாரமே என்க. கோயிலின் முக்கிய செயலே எண்ணத்தில் தூய்மை செய்வதுதான்.

குளம் கட்டி காத்த கோயில்கள். குளங்கள் உண்மையில் குளிக்கவே உருவாக்க பட்டன . அதன் பின்னனி அறிவியல் வேறு. வேதியியல் ஆர்வலர்களை கேட்டு பாருங்கள். காலையிலிருந்து வெயிலில் காய்ந்த தண்ணீரின் பெயர் டியூட்ரியம் என்பர் கிட்டதட்ட டிஸ்ட்டில் வாட்டர்களுக்கு (பேட்டரிகளில் பயன்படுத்தும்) சமம். அதன் ஆற்றல் என்னவென்றால். நம் உடலின் இரத்தநாளங்களை சாந்தபடுத்தி இரத்த வேகத்தை அதிகரிப்பது . உடலின் தோல் செல்களை புத்துணர்வு செய்வது போன்றன.. நல்ல கொழுப்புகளை சுத்திகரிப்பது என ஏராளம்..

அதே போல் இரவில் திறந்துகிடந்த நீரின் சக்தி வேறு. மரங்களும் மற்றஉயிர்களும் வெளியிடும் கார்பன் காற்றை உள்ளீர்த்து தன்னை தானே நீர் தூய்மை படுத்தி கொள்கிறது. மேலும் காஸ்மிக் கதிர்கள் நீர்நிலைகளால் ஈர்க்கபட்டு சக்தி பெறுகிறது. அதன் காரணமே காலையில் கோயில் குளத்து நீரில் மூல விக்ரகத்திற்கு அபிஷேகம் நடைபெறுகிறது . மாலையில் நிகழும் அபிஷேகமானது விக்ரகத்தை தூய்மைபடுத்த. காலையில் குளிப்பதால் கதிரியக்க  எதிர்ப்பை உடல்பெறுகிறது. ( இதன் காரணமே கோயில் குளத்தின் குளித்து வணங்கிவா தோஷம் தீருமென பெரியோர்கள் சொல்லினர்)..

சரி காஸ்மிக் கதிர்கள் என்றால் என்ன?
காஸ்மிக் கதிர்கள் என்பது நம் பூமியை போல சூரிய கோள்களின் சுழற்சியால் வெளியேற்றபடும் அதிர்வலைக்கதிர்கள்.  உதாரணமாக . ஒரு பம்பரத்தை மண்ணில் சுற்றவிட்டுபாருங்கள் அதன் சுழற்சியால் மணலில் சலனம் ஏற்பட்டு மணல் வெளியே நகரும் நம் கண்ணுக்கு தெரிவது இது. ஆனால் மணலோடு நகர்ந்தவை எத்தனையென நமக்கு தெரியாதே.. அதேபோல் காஸ்மிக் கதிர்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. இப்போது பம்பரத்தின் அருகினில் ஒரு இலையை காய்ந்த இலையை வைத்து பம்பரத்தை சுற்றவிடுங்கள் மணலும் இலையும் நகரும். பம்பரத்தின் அளவையும் சுற்றும் வேகத்தை பொருத்து மணல் மற்றும் இலையின் தூரம் மாறுபடும். அளவும் மாறுபடும். அதேபோல் பம்பரத்தின் சுழற்ச்சி திசை இலையின் நகர்வு திசையையும் அதன் வாழ்வையும் தீர்மானிக்கிறது. (இதை மற்றொரு கட்டுரையில் சொல்லவிருப்பதால் விளக்கவில்லை).

ஆக காஸ்மிக் கதிர்கள் நிஐம் பல்வேறுகிரகங்களில் பல்வேறு விதமாக வெளியேறுகிறது என்பது உண்மை. அவை நிதமும் நம்மை உடலளவிலும் மனதிலும் தாக்குவது உண்மை. அதிலிருந்து நம்மை சமன்செய்ய இது போன்ற தூய்மை அவசியபடுகிறது. அதை அறிந்து நடைமுறைபடுத்திய நம் முன்னோர்கள் அறிவாற்றல் நம்மை வியக்கவே வைக்கிறது..

அடுத்து கோயில் கட்டிடம். உலகில் பல்வேறு விதமான கட்டிடங்கள் உள்ளன அவற்றில் கோயில் கட்டிடங்கள் பிரச்சித்தமானவை. உலகில் கோயில்கள் பல்வேறு பொருட்களை மூலமாக கொண்டு கட்டபட்டுள்ளன. வாடிக்கன் சிட்டியின் சர்ச் ஒன்று முழுதும் ரப்பரால் கட்டபட்டது. புத்த மத தலைவராக திகழும் தலாய் லாமா  வசிக்கும் கோயில் மரத்தால் கட்டபட்டது. நேபாளம் மற்றும் சீனக்கோயில்கள் மரத்தாலானவை. ஐப்பானில் ஒரு கோயில் கூழாங்கற்களால் ஆனவை. நம் கோயிலின் அடிப்படை கற்கள். அதிலும் பாறைகள் . நமது கோயில்கள் எதற்கு சென்றாலும் சரி அங்கு ஒரு மண்டபம் உண்டு அதில் மற்றும் மற்ற கட்டிடங்கள் அனைத்திலும் ஒரு சிறிய கல்லை கீழேயோ அல்லது தூணின் மேலோ போடுங்கள் எதிர்த்து வரும் சப்தம் எதிரொலிக்கும். அதே நீங்கள் நின்று வணங்கும் எந்த இடத்திலும் எதிரொலிக்காது. காரணம் விக்ரகத்தின் அதிர்வுகள் காற்றின் மூலம் பரவி நிறைந்து எதிரொலியை அடக்கிவிடுகிறது.  (பாசிட்டீவ் நெகட்டீவ் எனர்ஜி சமன்பாட்டின் படி பாசிட்டீவ் எனர்ஜியின் பயணபாதையில் நெகட்டீவ் இல்லாததால் எதிரொலிக்காது)..

மலர் மாலைகள் ஏன் தெரியுமா? நறுமணத்தின் ஆற்றல் தெரியுமா? ஃவாக் சென்ட் போட்டுக்கோ . ஆக்ஸ் டியோ அடிச்சிக்காே எந்த பொண்ணும் எந்த வேலையிலிருந்தாலும் அப்புடியே விட்டுட்டு வந்துருவானு வர . லக்ஸ் சோப்ல . பவர் சோப்ல பூக்களின் சாறு இருக்கிறது அதில் குளி ஆண்கள் வட்டமடிப்பார்கள் என்று வர  மட்ட விளம்பர தியரிபடி . மலர்களின் நறுமணம் நிச்சயம் நல்ல எண்ணங்களை வளர்க்கும். என்பதில் ஐயமில்லை..

ஊதுபத்தி சந்தனம் மஞ்சள் போன்றனவின் கடமையும் அதே.  மஞ்சள் கிருமி நாசினி. குங்குமம் மனநிலையின் வைப்ரேட்டர். நிறத்திலும் சரி நறுமணம் மற்றும் அதிர்வுகளிலும் சரி வைப்ரேட்டர் தான் . (வைப்ரட்டர்கள் பற்றி வேறோரு கட்டுரையில் சொல்லலாம்).

திருநீர் என்னும் விபூதியும் ஒரு வித வைப்ரேட்டர் தான் ஆனால் அதன் நிலை வேறு..

விக்ரக அதிர்வுகள் எப்படி?

இதுக்கு ஒரு உதாரண சோதனை சொல்றேன்.  நீங்க உங்க ரூம்ல. அதாவது தனியான ரூமாக இருந்தால் . அதில் சீலிங் பேன் இருந்தால் பெரும்பாலும் நடுவில் தான் இருக்கும். ஐன்னல்களை சாத்திவிட்டு. நடுவில் ஒரு கல் (எந்த கல்லாயினும் சரி) ரெண்டு காப்பர் தகடுகள் (கல்லின் அடிமட்ட அகலத்தில் ஒரு இன்ச் பெருசா). அதை தரையில் வைத்து அதன் மல் கல்லை வைத்து கொஞ்சமா தண்ணி ஊற்றி . பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் எண்ணெய் மட்டும் வைத்து. பேன் சுற்றவிட்டு  வாசலில் (ரூம் வாசலில் ) நில்லுங்கள் வாசலை மறிப்பதுபோல். பத்துநிமிடத்திற்குள் வாசனையால். உணர்வினால். குளிரினால். ஏதேனும் அதிர்வுகள் தெரியவில்லை என்றால் சொல்லுங்கள். இன்னோரு சோதனை சொல்றேன். (முட்டாள்தனமாக நினைப்பவர்களுக்கு உங்கள் அன்பிற்கும் காதலுக்கும் உரிய ஆங்கிலேயரும்.. வெளிநாட்டு அறிவியலாளர்களும் இதைனையே செய்தனர் என்று சொல்விரும்புகிறேன். ஸ்டோன் ரூம் டெஸ்ட் என்கிற பெயரில் ).

கொடிமரம் சொல்லாமல் எப்படி. கோயிலின் முக்கியமல்லவா. கொடிமரம் சைட் சீயிங் எக்ஸர்ஸைஸ் என்பதின் ஆதிகால அறிவியல். மேல் நோக்கி பார்ப்பதால் வெயிலின் பிரதிபலிப்பின் காரணமாக கண்கள் கூசும் கண்களின் நீர்சுரபிகள் சிலிர்ப்பதால் ஏற்படும் விளைவுயிது.

தீர்த்தம் . கிட்டதட்ட எலக்ட்ரோலைட் போல. கோபுரங்கள் பல்வேறு புராணங்களை நினைவுசின்னமாக தாங்கி நிற்கிறது.

அட கோபுரத்தை மறந்தேனே. ஏற்கனவே சொல்லிருந்தாலும் ஒரு ரிப்பீட். கோபுரத்தின் சிறப்பே அதன் வாயிலும். மேலிருக்கும் கலசமும் தான். .

கோபுர வாயில் பெரும்பாலும் பகலில் குளிராகவும் இரவில் உஷ்ணமாகவும் இருக்கும். குளத்திலும் இதே நிலைதான். காரணம். காற்று. உயரமாக அதே சமயம் சற்று அகண்ட பெரிய கட்டுமானம் காற்றை தடுப்பதால் காற்றாலையின் செயல்பாட்டிற்கு சமமான செயலிது. ஆனால் நடுவே யிருக்கும் வாயிலானது காற்றை சுழற்றி உள்ளே வெளியே அலையவிடுவதால் பகல் வெம்மையில் அலாவுதல் குளிராகவும். இரவின் குளிரில் தடுப்பின் உராய்வினால் உஷ்ணமாகவும் இருக்கும். கோபுரங்களை அமைத்து கோயிலினுள் காற்றையே ஒரு குறிப்பிட்ட சுற்றுபாதையில் சுற்றவைத்தவன் தமிழன். கட்டுக்கடங்கா புயலே வந்தாலும் கோயிலின் சுற்றுபாதைக்கு கட்டுபட்டாகவேண்டும். புயலில் காக்கும் இடம் கோயில்.

கோபுர கலசம். தமிழனின் உயரிய குணத்தின் அடையாளமிது. ஒருவேளை ஊர் இயற்கை சீற்றத்தால் பாதிக்கபட்டால் கோயில் தங்குமிடமாவதை போல் கலசமும் காக்கும் .

ஒருவேளையில் பெருமழையோ பூகம்பமோ வந்து ஊரே அழிந்தாலும் தலைமுறையும் இயற்க்கையும் செழிக்க வேண்டி கலசத்தை வைத்தான் தமிழன். உலகில் எந்த மதம் சார்ந்த இறைவணக்க இடத்திலும். எந்த கட்டிடத்திலும் இல்லா. ஏன் எந்த கலாச்சார மனிதனிடமும் இல்லா பெருங்குணம் நமக்குண்டு.

பெருமழை அழித்தபின் எஞ்சியோர் கோபுர கலசத்தின் தானியங்களை கொண்டு பயிர்செய்து பிழைக்கலாம். அப்படி மனிதரே இல்லாது மொத்த ஊரும் அழிந்தாலும். கோபுரமே இடிந்துவிழும் அளவு பெரிடர் நேர்ந்தால். கலசம் உடைந்து தானியம் இறைந்து முளைத்து பயிராகி வளர்ந்து மற்ற ஜீவராசிகளை காக்கும். கலசமே புதைந்தாலும் அதை மண்ணரித்து விதை வளரும். தானழிந்தும் தலைமுறை வாழ வழிசெய்து. தலைமுறையே அழிந்தும் இன்ன பிற ஜீவராசிகள் வாழவிவிட்டு. ஜீவராசிகளே அழிந்தாலும் புதிய உயிர் தொடர் துவங்க வழிவிட்ட தமிழன் இறைவனுக்கும் மேலென்பேன் நான்..

கோயில்கள் நம் முன்னோர் நமக்கு விட்டு சென்ற ஆன்மீக மற்றும் அறிவியல் பொக்கிஷங்கள் . அவற்றை அறிந்து காத்து நமது வழியினருக்கு நல்முறையில் ஒப்படைத்து செல்வோம். நாமும் நம் முன்னோர் போல பெயர் பெறுவோம்...

....தமிழனின் அறிவிற்கும் குணத்திற்கும் சமர்ப்பணம்....


This post first appeared on Writer Pavithran Kalaiselvan, please read the originial post: here

Share the post

கோயில்கள் பழங்காலத்தில் 2

×

Subscribe to Writer Pavithran Kalaiselvan

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×