Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கனவு நகரம் -சிறுகதை..

50000 பேர் நிறைந்த சபையில் நான் நல்லிசை பாடலை பாடிட.. கண்ணீர் மல்க பலர் ரசித்திட... விா முடிந்ததும் பாராட்டுகளும் பரிசுகளும் குவிய ;அன்று இரவு நல்ல நிம்மதியான உறக்கம் விழித்துபார்த்தால் எனது மொத்த சூழலுமே புதிதாய் அதி நவீனமாய் மாறிட... நான் ஒரு உயர்ரக பிரம்மாண்ட விமான நிலையத்தின் வாசலில் நிற்கிறேன்..

என் மனதின்போராட்டத்தை உணர்ந்தது போல் ஒருவன்.. சார் டாக்ஸி வேணுமா? என்று கேட்டான்.. மையமாக தலையசைத்தேன்... எங்க போகணும்? என்றான். குழப்பத்தின் உச்சதாயியில் நான் இருப்பதை கண்டு  . சார் அட்ரஸ் மிஸ் பண்ணிடீங்களா? என்று கேட்க...

இல்ல சார் இது வேறு பிரச்சனை ஒருவிதத்தில் அட்ரஸ் தொலைத்தது போலதான்..எனக்கு எல்லாமே புதுசா இருக்கு.. வேற எங்கயோ வந்துட்ட மாதிரி இருக்கு... அப்படியா? உங்க கழுத்த காட்டுங்க என்றபடி நான் அனுமதிக்கும் முன் என் காலரை இழுத்து தளர்த்தி முகர்ந்து. Change of metabolism என்றான். மேலும் என் முதுகு தண்டின் அடிவார்திலிருந்து மூண்றாவது எண்ணிக்கையில் சற்று வலிய அழுத்தினான் எனக்கு முற்றும் மறந்து மயங்கிட விழுந்தேன்..

சிறிது நேரம் கழித்து ... அருகிலிருப்பவன் ஒருவனிடம் இவன் கண் அசைக்க . என்னை இவன் காரினுள் ஏற்றிட அருகிலிருப்பவன் கண்ணீர் மல்க என்னை வணங்குவதை பார்த்து குழம்புகிறேன்...

என்ன எங்க கூட்டிபோறீங்க? என்றேன்.. ஆஸ்டின்ன நீங்க பாக்கனும் பாஸ்.. என்றான்.. பாஸ் ஆ யாரு நானா? யாரு ஆஸ்டின்? எங்க இருக்காங்க? எந்த இடமிது? என்றபடி எனக்கு முன் இருந்த ரியர் வியூ மிரர்ரில் பார்க்க ஐயோ.. நான் நானில்லை .. என் உடலில்லை என் உருவமில்லை.. என்ன விந்தையிது? சார் ஒரு பெரிய பிரச்சனை நான் நானாகவே இல்லை என்றேன் டாக்ஸி நபரிடம்..

தெரியும் பாஸ் ; இத்தனை கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை .. நீங்க ஆஸ்டின்கிட்ட தான் கேட்டு தெரிஞ்சிக்கனும்..  அதுவரை எனக்கு ஒத்துழைப்பு குடுங்க.. வேறுவழியின்றி நான் சாலைகளை வெறித்திட..

நகரத்தின் பரிமாணங்கள் புதிது எல்லாம் நியான் மயம்.. எங்கள் கார் கூட சாலைகளில் பயணிப்பதாக தெரியவில்லை.. அந்தரத்தில் பறப்பதுபோல இருந்தது. காரணம் சராசரியாக 7வது 8வது மாடிகள் எனக்கு சம அளவில் இருந்தன.. சிறிது நேரத்தில் ஆஸ்டினிடம் சேர்க்கப்பட்டேன்...

வாங்க பாஸ்.. என்றபடி வந்தது ஒரு கருமையான குட்டையான தொப்பையுடைய கோட் உருவம்.. உங்களுக்கும் பாஸா? சரிங்க ஆஸ்டின் என் பிரச்சனை பற்றி உங்ககிட்டதான் கேட்கனும்னு டாக்ஸி காரர் சொன்னாரு.. தெரியும் பாஸ் அதுக்கு முன்னாடி உங்க கழுத்த பார்க்கனும்.. கலரை தளர்த்தி முகர்ந்து முதுகு தண்டை நோக்கி விரல் நகர நான் அவரை தள்ளிவிட்டு. மன்னிக்கனும் டாக்ஸி காரர் ஏற்கனவே அழுத்தி தான் எல்லாம் மறந்தது..

ஓ அவர் அழுத்திட்டாரா?  இந்த பச்சகலர் டியூப் உங்கிட்ட குடுத்தாரா நீங்க சாப்பிட்டீங்களா? இல்ல தரல.. பரவாயில்ல எனக்கு தெரியவேண்டியதெல்லாம். இந்த உடம்பு என்னுடையது இல்ல ; இந்த இடம்கூட என்னுடையதில்ல நான் எங்க இருக்கேன்?..

சொல்றேன் பாஸ் நீங்க உங்க ஊர்ல தான் இருக்கீங்க. இதோ இந்த கனவு நகரத்தை உருவாக்குனதே நீங்கதான்.... என்ன சொல்றீங்க ? பொய் நான் இருந்தது வேற இடம் நான் எப்படி இத உருவாக்கிருக்க முடியும்..

உண்மை தான் பாஸ் ; இதோ இந்த பாட்ட கேளுங்கனு ப்ளே பண்ண. நேற்று மேடையில் நான் பாடியதே.. .. ஆமா உங்க பாட்டுதான் அதனால தான் சொல்றேன் இது நீங்க உருக்குன நகரம்னு...

அட என் பாட்டுக்கும்இந்த நகரத்துக்கும் என்ன சம்பந்தம்? ஓ உங்களுக்கு இன்னும் ஞாபகம் வரலயா? இந்த வீடியோவ பாருங்க .. அதே பாட்டு இந்த நகரத்தின் உயர்ந்த கீதமாக கொண்டாடபடுகிறது. நான் இதோ இந்த உடலில் அந்த கீதத்தை இசைத்து பாடுகிறேன்...

எனக்கு புரியவேயில்ல மிஸ்டர் ஆஸ்டின். நான் இந்த உடம்பு என்னுடையது இல்ல ஒருவேளை இந்த உடம்புக்கு உரியவர் செய்திருக்கலாமோ? ஆனால் பாடல் என்னுடையது. எனது வேறு உடலுடையது. முதல்லஇது பூமியில எந்த இடம்?...

ஆஸ்டினுக்கும் டாக்ஸிகாரருக்கும் பெரும் அதிரச்சி..  சிறிது நேர மௌனத்திற்கு ஆஸ்டின் ஆசுவாசமடைந்ததாய். பாஸ் அப்ப நீங்க பாக்கவேண்டிய இடம் ஒன்னு இருக்கு...

மீண்டும் என்னை டாக்ஸியில் ஏற்றி நகரின் பல்வேறு முக்கிய பிரதான சாலையில் பயணித்து.. பின் நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு மலைசிகரம் போன்ற உயர்ந்த மேடையில் இறங்கினோம். சிறிது தூரம் கால்நடையாக நடந்து.. அந்த மேடையின் மத்தியில் உள்ள ஒரு ஆழ் துளைக்கு அருகில் சென்றோம். அதனை காட்டி ஆஸ்டின் இப்போது ஞாபகம் வருகிறதா பாஸ் என்று கேட்க ஞாபகம் வரல என்றேன்...

சரி அப்ப நாங்க உண்மைய சொல்லிடுறோம் கண்ணன். என்னது கண்ணன் ஆ? ஆமாம் உங்க பேர் கண்ணன் நீங்க தான் இந்த நகரத்த உருவாக்குனீங்க.. இந்த துவாரக் என்கிற நகரத்தை உருவாக்குனது நீங்கதான்.. இதோ இந்த துளை இருக்கே இதை சுற்றி தான் இந்த நகரம் உருவாக்கபட்டது.. இந்த துளை இந்த நகரத்தின் மிகவும் புனிதமான இடமாக வணங்கபடுது.. இந்த துவாரத்தின் காரணமாக தான் இந்த இடத்துக்கு துவாரக் என்று பேர் வச்சீங்க...

சரியா 40 வருசத்துக்கு முன்னாடி ; இங்க நடந்த பூஜைல நீங்க தவறி விழுந்து உங்களுக்கு பலமா அடிபட்டிருச்சி... இந்த கிரக வழக்கபடி இந்த துவரத்துக்குள்ள விழுந்தவங்க. தன் உடலை இழந்து பூமியில மனிதனா பிறப்பாங்கனு ஒரு நம்பிக்கை இருந்தது.  நகரத்தின் பலபேர் கடவுளா கும்பிடும் உங்களுக்காக நாங்க இந்த துவாரத்துல இறங்கி உங்க உடல எடுத்தோம் . மருத்துவ பரிசோதனையில உங்களுக்கு பலமா அடிபட்டதால நீங்க கோமாவுல இருந்தது தெரிந்தது.. அப்படி கோமாவுலயே 40 வருசமா இருந்தீங்க..

நேத்து சாயந்திரத்துல இருந்து உங்கள காணோம் தேட சொல்லி. ஆட்கள அனுப்பினதுல எங்க ஆட்கள்ள ஒருத்தனான டாக்ஸிகாரர் உங்கள கண்டுிடிச்சி கொண்டுவந்தார்..

உண்மையில் இது போல நடக்குமா? இவர் சொல்றதை நம்பலாமா? நாற்பது வருசமா கோமால இருந்தேங்கிறாங்க ; நேத்து ராத்திரி தான் எனக்கு நாற்பது வயது முடிந்தது.. குழப்பத்தில் ஆஸ்டினையும் டாக்ஸிகாரரையும் நகரத்தின் பரிணாமத்தையும் வெறித்தபடி பாரத்து நடந்த கொண்டிருந்த போது  தவறுதலாக மீண்டும் அந்த துவாரத்தில் விழுந்தேன்...

...........நன்றி .......This post first appeared on Writer Pavithran Kalaiselvan, please read the originial post: here

Share the post

கனவு நகரம் -சிறுகதை..

×

Subscribe to Writer Pavithran Kalaiselvan

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×