Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை உப்பு கொண்டு கூட சரி செய்யலாம் தெரியுமா ?

முகம் பொலிவுடன் இருப்பதை விரும்பாதவர் யார் தான் இருப்பார்கள். தற்போது முகத்தை அழகு படுத்துவதில் ஆண் பெண் போன்ற இருபாலருமே அதிக கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் முகத்தின் அழகை சீர்குலைக்கும் ஒன்றாக கரும்புள்ளி உள்ளது. இதனை இயற்கை முறையில் எளிமையாக போக்கி முகத்தின் அழகை எப்படி பராமரிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்

தேன் சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. ஆகவே உங்கள் சருமம் மென்மையாக விரும்பினால் 1 ஸ்பூன் தேனில், 2 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு நாள்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

2ஸ்பூன் உப்பு மற்றும் சர்க்கரையை கலந்து வைத்துவிட்டு முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்பு கலந்து வைத்திருக்கும் கலவையை கொண்டு முகத்தை நன்கு மசாஜ் செய்து கால் மணி நேரம் கழித்து, ஈரமான காட்டன் கொண்டு துடைத்து எடுத்து பின் மாஸ்சுரைசர் கொண்டு தடவவும். இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் அதிகமாவதை தடுக்கலாம்.

ஒரு ஸ்பூன் கல் உப்பை ரோஸ் வோட்டர் கலந்து, முகத்தை மென்மையாக நன்கு மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்தில் ஒரு நாள் செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விலகும்.

ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் பால் மற்றும் 1 மேசைக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி பதினைந்து நிமிடம் காய செய்து பின் முகத்தை நன்கு தேய்த்து கழுவி வர கரும்புள்ளிகள் நீங்கும். இப்படி வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் செய்து வந்தால், நல்ல மாற்றம் கிடைக்கும்.

The post முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை உப்பு கொண்டு கூட சரி செய்யலாம் தெரியுமா ? appeared first on Zio Tamil.



This post first appeared on Ziotamil, please read the originial post: here

Share the post

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை உப்பு கொண்டு கூட சரி செய்யலாம் தெரியுமா ?

×

Subscribe to Ziotamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×