Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இந்த 12 நன்மைகளும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமானால் சுரைக்காய் சாப்பிட தவறாதீங்க!

வெளிர்பச்சை நிறத்தில் நீளமாக இருக்கும் காய்கறி வகையில் ஒன்று தான் சுரைக்காய். இதில் அதிக அளவில் நீர்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன.

இந்த காய்கறி உடலுக்கு பலவிதமான மருத்துவ நன்மைகளை வழங்குகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகளை குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

சிறுநீரகம்

சுரைக்காய் அதிக நீர் சத்து உடைய காய் ஆகும். ஆகவே சுரைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது. மேலும் சிறுநீரை குழாயில் உள்ள தொற்றுக்களை போக்கவும் உதவுகிறது.

சிறுநீரகக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை நன்கு மசித்து அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றையும் சேர்த்து அருந்தினால் சிறுநீரம் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்.

சூட்டை தணிக்கும்

கோடை கால வெப்பம் நமது உடல் சூட்டை அதிகரிப்பதோடு, தோல் சம்பந்தமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. சுரைக்காய்அதிக குளிர்ச்சி உடையதால் இதனை சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் நமது தோலுக்கு பளபளப்பை கொடுக்கும்.

உடல் எடை

சுரைக்காய் அதிக நீர்ச்சத்து கொண்டது. ஆகையால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சுரைக்காய் ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையை குறைக்கும். மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, சுரைக்காய் மற்றும் தேன் இரண்டையும் கலந்து சாப்பிடலாம். இதனால் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை தூண்டச் செய்வதால் ஆரோக்கியம் மேம்படும்.

அல்சர்

சுரைக்காய் அதிகம் நார்ச்சத்து கொண்டது . குடலில் அல்சர் புண்கள் உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். வயிற்றில் ஏற்படும் பாதிப்புகள், மலச்சிக்கல் போன்றவை தீரும். மேலும் மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக செயல்படுகிறது.

கண்நோய்கள்

இந்த நவீன காலத்தில் பலருக்கும் கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய கண் குறைபாடுகளை போக்க சுரைக்காயைச் சுட்டு நன்கு மசித்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

கர்ப்பிணிகளுக்கு

கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்து, விட்டமின் இருப்பதால் இதனை கர்ப்பிணிகள் எடுத்துக் கொண்டால் கருவின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மன அழுத்தம்

சிலருக்கு அதிக வேலைப்பளு மற்றும் பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. சுரைக்காய் சாப்பிட்டால் மன அழுத்தத்தை போக்வதோடு, நரம்புகளில் உண்டாகும் இறுக்கங்களை போக்குகிறது. மேலும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.

கல்லீரல்

கல்லீரல் என்பது உணவுகளில் இருக்கும் விஷத்தன்மையை முறித்து, உடலுக்கு நன்மையை தருகிறது. இந்த கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் சுரக்காய் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வர கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.

தூக்கமின்மை

இரவு நேரங்களில் தூக்கம் வராதவர்கள் நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்த்து இரவில் தூங்க போகும் போது தலைமுடிகளில் நன்கு மசாஜ் செய்ய விட்டு படுக்க உடனே தூக்கம் வரும். மேலும் சுரைக்காயின் இலைகளைச் சமைத்து சாப்பிட்டாலும் நன்கு தூக்கம் வரும்.

பித்தம்

சிலருக்கு உணவுகளை மாறி சாப்பிடும் போதும் , மன அழுத்தத்தாலும் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்கள் ஏற்படுகிறது . இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் விரைவிலேயே குணமாகும்.

ஜீரண சக்தி

ஜீரண சக்தியை அதிகரிக்க சுரைக்காய் ஜூஸை குடித்தால் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் எளிதில் ஜீரணம் அடையும்.

The post இந்த 12 நன்மைகளும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமானால் சுரைக்காய் சாப்பிட தவறாதீங்க! appeared first on Zio Tamil.



This post first appeared on Ziotamil, please read the originial post: here

Share the post

இந்த 12 நன்மைகளும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமானால் சுரைக்காய் சாப்பிட தவறாதீங்க!

×

Subscribe to Ziotamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×