Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பிரேமம்

200 நாட்களைக் கடந்து ஒரு மலையாளச் சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது. அனேகமாக எல்லா நல்ல சினிமா ரசிகர்களும் பல முறைப் பார்த்து இருப்பார்கள். நான் இப்பொழுதுதான் பார்த்தேன் ”பிரேமம்” மலையாளச் சினிமாவை. இத்தனை நாளாக இதை பார்க்காமல் இருந்துவிட்டேனே என்று சற்று வருத்தமாக இருந்தது. படம் பார்த்தப்பிறகு எல்லாமே மறந்துபோய்விட்டது.

                                  சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என்று இந்தப் படத்தைப் பற்றி பேசி, ஏழுதிதள்ளிவிட்டார்கள். நான் இந்த படத்தில் ரசித்தவைகளை படம் பார்க்கும் போது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

                                இந்தப் படத்தில் முதலில் என்னைக் கவர்ந்த விடயம்.  ஒளிப்பதிவு. ஆனந்த். சி. சந்திரன் கேமிராவை வைத்து விளையாடி இருக்கிறார். புதுமையான சில கோணங்களை முயற்ச்சித்துப் பார்த்திருக்கிறார். குறும்படத்திலிருந்து வந்தவர்கள், லாங் சாட் காட்சிகள் அதிகம் வைக்க மாட்டார்கள் என்று, என் சினிமா நன்பர் ஒரு முறை கிண்டல் செய்தார். அதை உடைத்து மிக சிறப்பான லாங் சாட் காட்சிகளை சந்திரன் அமைத்திருக்கிறார்.

                           ஜார்ஜின் கல்லூரி கால அறிமுகத்தின் போது, மேடையின் அடியில் ஜார்ஜ் , கோயா, சம்பு மூவரும் வெடிகுண்டை பற்ற வைத்துவிட்டு, நடந்து வந்து முன்னால் நிற்கும் காட்சியை ஒரே ஷொட்டில் எடுத்திருப்பார்.

                        அல்போன்ஸ் புத்திரனின் நேரம் படத்தையும், ரொம்ப நாள் கழித்துதான் பார்த்தேன். வணிக சினிமாவில் இதுபோன்ற புதிய முயற்சிகள் அரிதே. அதற்காகவே அல்போன்ஸை பாராட்டலாம்.

                       அல்போன்ஸின் இயக்கத்தைக் காட்டிலும் அவரின், கதாபாத்திரங்களின் தேர்வுதான் அவரின் பலம். எல்லா கதாபாத்திரங்களும் சரியாகவே பொருந்தி இருந்தார்கள். அல்போன்ஸுக்கு நடிப்பும் சிறப்பாகவே வருகிறது.

                     நிவின்பாலியை பார்க்கும் போது, எதிர்காலத்தில் நடிப்பில் மிகப் பெரிய உச்சத்தை, தொடுவார் என்றே கூறலாம். பள்ளி மாணவனாக வருப்போதும் சரி, கல்லூரியில் வேட்டிக் கட்டிக் கொண்டு வருபோதும் சரி, கேக் கடை நடத்தும் பொருப்பான மனிதனாய் வரும்போதும் சரி, மிக இயல்பாகவே நடித்திருக்கிறார்.

                   அனுபமா, சுருட்டை முடி இருந்தாலும் பெண் அழகாக இருப்பார்கள் எண்பதற்கு அனுபமாவே சான்று. பாவம் நிறைய பெண்கள் இயற்கையாக தங்களுக்கு இருக்கும் சுருட்டை முடியை, ஏன் தான் நேராக்கிக்கொள்கிறார்களோ?

                 நடிப்பு குறைக்கூறும்படியாக இல்லை. அவருடைய பாங்கை சிறப்பாக செய்துள்ளார்.

                 கோயா, சம்புவாக வரும் கிருஸ்னன் மற்றும் சபரீஸ், அந்த பாத்திரமாகவே மாறியிருந்தார்கள்.

                  மலர் டீச்சரை ஒருதலையாக காதலிக்கும், பேராசிரியராக வரும் வினை போர்ட், அதி அற்புதமான நடிப்பு என்றே கூற வேண்டும். பி.டி மாஸ்டருடன் சேர்ந்து, செய்த நகைச்சுவையை இப்பொழுது நினைத்தாலும் மனம் சிரிக்கத் தொடங்கிவிடுகிறது.

             செலினாக வரும் மடோனா மட்டும் ஏனோ மனதில் ஒட்டவேயில்லை.


மலர் டீச்சர்

பண்டைய தமிழகத்தின் சேர நாடுதான், கேரளா. ஆனால் தமிழர்களை கேவலமாக பார்க்கும் போக்கு அங்கு உண்டு. ஆணால் இன்று மலரே, மலரே என்று மொத்த கேரளாவும், ஒரு தமிழச்சியின் மீது மோகம் கொண்டு அலைகிறது.

          ‘மலர்’
          ‘என் பேர சொன்னேன், உங்க பேரு’

என்ற முதல் வசனத்திலேயே நான் மலர் டீச்சரின் ரசிகனாகிவிட்டேன். இந்த காட்சியை மட்டும் ஒரு 30 முறை பார்த்து இருபோன். பின் அந்த இரவு முழுவதும் மலர் டீச்சர் மட்டுமே மனதை அடைத்துக் கொண்டுவிட்டார்கள்.

                மலர் டீச்சர் வரும் ஒவ்வொரு காட்சியையும், ரசித்து ஒரு நாள் முழுவதும் பேச சொன்னாலும் பேசிக்கொண்டேயிருப்பேன்.

மாணவர்கள் பெஞ்சுகளில் தாளம் தட்டுவதை, ஆசிரியர் அறையிலிருந்து தலையாட்டி ரசிக்கும் போதே நம் மனதில் நச்சென்று ஒட்டிக்கொள்கிறார். தன் மாணவன் மீது எற்படும் காதலை, வெளிகாட்டவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல், தவிக்கும் காட்சிகளில் மிக இயல்பாக நடித்து இருக்கிறார்.

              ஜார்ஜ் மற்றும் நன்பர்களுக்கு ஆண்டு விழாவிற்காக நடனம் கற்றுதரும் போது, இசையை கேட்டுக் கொண்டே, நடந்து வந்து சாய் பல்லவி ஆடு ஆட்டத்தை, பார்த்தபோது ஜார்ஜ்,கோய வை போல நானும் வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

            மலர் டீச்சருக்காகவே மீண்டும், மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஜார்ஜின் மூண்று காதல்களில், மனதில் பசுமையாய் நின்றது என்னவோ மலரின் காதல்தான். தெலுங்கில் அடுத்த மாதம் பிரேமம் வெளியாகிறது. ஸ்ருதியை என்னால் மலராக நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.

          ஒரு வேளை தமிழில் எடுத்தால், சாய் பல்லவியே நடித்தால்தான், ஒரளவு மலரை மறுவுருவாக்கம் செய்யமுடியும். சாய் பல்லவியாலேயே மலரை மறுவுருவாக்கம் செய்வது சற்றே கடினம்.

 ராஜேஸ் முருகேசன்

படத்தின் இசையைப் பற்றி கூறியே ஆக வேண்டும். எல்லாப் பாடல்களுமே நன்றாக உள்ளது. மிகச் சிறந்த பின்னனி இசை. இளையராஜா, எ,ஆர். ஆரை படம் முழுவதும் கொண்டாடியிருக்கிறார்கள்.

    இன்னும் கூட தமிழில், கதா நாயகர்களையே நம்பி படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், பிரேமம் போன்ற சிறந்த பாத்திரங்களை கொண்ட திரைப்படங்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

 மக்களுக்கு இந்த மாதிரி படம்தான் பிடிக்கிறது, என்ற பொய்யை தமிழ் சினிமா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நிறுத்தவேண்டும்.

ஆனால் தமிழில் புது இயக்குனர்கள், பல பரிச்சார்ந்த முயற்ச்சிகளை செய்வது, மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் உள்ளது.

சரி எனக்கு மறுபடியும் ‘பிரேமம்’ பார்க்கனும் போல் இருக்கு. நான் போய் படம் பாக்க போறேன்.


This post first appeared on ஒரு முட்டாளின் நாட்குறிப்பு, please read the originial post: here

Share the post

பிரேமம்

×

Subscribe to ஒரு முட்டாளின் நாட்குறிப்பு

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×