Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

நேருவும் குழந்தைகளும் கட்டுரை

அன்புள்ள வாசகர்களே, இன்று உங்கள் அனைவருக்காகவும் நேருவும் குழந்தைகளும் கட்டுரை PDF ஐப் பகிரப் போகிறோம். ஜவஹர்லால் நேரு 14 நவம்பர் 1889 இல் பிறந்தார் மற்றும் 27 மே 1964 இல் இறந்தார். அவர் ஒரு இந்திய காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதி, மதச்சார்பற்ற மனிதநேயவாதி.

இதனுடன், அவர் ஒரு சமூக ஜனநாயகவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார், அவர் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் ஒரு மைய நபராக இருந்தார். ஜவஹர்லால் நேரு 1930 மற்றும் 1940 களில் நடைபெற்ற இந்திய தேசியவாத இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளின் நினைவாக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது, அவர்களின் அனுசரிப்பு தேதி நாடு வாரியாக மாறுபடும். நீங்கள் ஒரு மாணவர் மற்றும் குழந்தைகள் தினத்தில் கட்டுரை எழுத விரும்பினால், இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நேருவும் குழந்தைகளும் கட்டுரை PDF – Highlights

  1. முன்னுரை
  2. குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள்
  3. குழந்தைகள் தினக் கொண்டாட்டம்
  4. நேருவும் குழந்தைகளும்
  5. முடிவுரை

முன்னுரை

உலகம் முழுவதும் ஏதோவொரு சிறப்பு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்ற வழக்கமுண்டு. இதில் மகிழ்வான நாட்களுமுண்டு துக்கமான நினைவுகளை நினைவு கூறும் நாட்களுமுண்டு.

இதன் காரணம் குறித்த நாள் பற்றி மனிதர்கள் தெரிந்து கொள்வதற்காகவும்⸴ அதனை நினைவில் கொள்வதற்குமாகும். இவ்வாறே பாரத தேசத்திலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.

முன்னாள் பிரதமரும்⸴ இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும்⸴ இந்தியாவின் ஒளி விளக்காகத் திகழ்ந்த மாந்தருள் மாணிக்கமுமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் திகதியே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

பாரத நாடெங்கும் ஆண்டு தோறும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் உலகை ஆளப் போகின்றவர்கள் குழந்தைகளே இவர்களைக் கொண்டாடி மகிழும் நாளான குழந்தைகள் தினம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள்

வெள்ளை மனம் கொண்ட குழந்தைகளுக்கான குழந்தைகள் தினம் உலகம் முழுவதிலும் நவம்பர் 20ஆம் நாள் சர்வதேச குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.

இருப்பினும் இந்தியாவில் நவம்பர் 14 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பிரதமர் நேரு அவர்கள் குழந்தைகள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராவர். இதனாலேயே இவர் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகின்றது.

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்கக்கவும் இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகின்றது.

குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

பள்ளி மாணவ⸴ மாணவியர்கள் குழந்தைகள் தினத்தன்று தத்தமது பள்ளிக்கூடங்களில் விமர்சையாக கொண்டாடி மகிழ்வர்.

காலையில் தேசியக்கொடி ஏற்றி ஆரம்பிப்பர். தலைமை தாங்குதல்⸴ சொற்பொழிவாற்றல்⸴ கலை நிகழ்ச்சிகள் நடாத்துதல் முதலியன மாணவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

இவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டியாகச் செயற்படுவார். அன்றைய தினம் அனைத்துக் குழந்தைகளும் மகிழ்வாக தமது நேரத்தை செலவழிப்பார்.

நேருவும் குழந்தைகளும்

முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் குழந்தைகள் மீது அதிக அக்கறையும்⸴ அன்பும் கொண்டவர். குழந்தை வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

நேரு அவர்கள் குழந்தைகள் பற்றிக் கூறும் போது குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை அளித்து அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகள் வழங்கும் போது தான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள் என்றார்.

நேருவின் மீது குழந்தைகளும் மிகுந்த அன்பு கொண்டுள்ளார்கள். அதனால் தான் அவரை “நேருமாமாˮ என அன்புடன் அழைக்கின்றனர்.

முடிவுரை

எதிர்கால சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஆற்றல் பெற்றவர்கள் குழந்தைகளே எனவேதான் குழந்தைகள் தினம் நம் தேசத்தில் மிகுந்த மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பிறந்தநாளில் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கட்கும் அஞ்சலி செலுத்தப்படுகின்றது குழந்தைகளாகிய நாம் நேருவைப் போல் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தி அறிவாற்றலுடன் சிறந்து வாழ வேண்டும்.

பின்வரும் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நேருவும் குழந்தைகளும் கட்டுரை PDF ஐ பதிவிறக்கம் செய்யலாம்.



This post first appeared on PDF File, please read the originial post: here

Share the post

நேருவும் குழந்தைகளும் கட்டுரை

×

Subscribe to Pdf File

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×