Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கொள்ளு பயறு மருத்துவ பயன்கள்


கொள்ளு

கொள்ளு ஒருவகை பயறு வகையாகும். இதற்கு கொள், காணம், முதிரை என்று  வேறு பல பெயர்களும் உண்டு. இது தட்டையாக பழுப்பு மற்றும் செமண் நிறத்திலும் காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் 'ஆர்ஸ் கிராம்' (Horse Gram) என்று பெயர். அதற்குக் காரணம் இந்த பயறு குதிரைக்கு தீவணமாகக் கொடுக்கப்பட்டது.



எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் உணவாக அளித்தனர்.  குதிரைகள் பல மைல் தூரம் தொடர்ந்து ஓடும் சக்தியை அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில்  இருந்து எடுத்து கொள்கிறது. கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு  அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

கொள்ளில் அடங்கியுள்ள ஊட்டசத்துக்கள்

கொள்ளில் புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து, மாவுசத்து, தாதுபொருள்கள், வைட்டமின்கள் போன்றவை மிகுதியாக நிறைந்துள்ளது. மேலும் எண்ணற்ற நுண்சத்துகளையும் கொள்ளு தன்னகத்தே கொண்டுள்ளது.

கொள்ளின் மருத்துவப்பயன்கள்

உடல் எடையை குறைக்கும்

இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளுஎன்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். அந்த பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைக்க தேவையான சத்துக்கள் கொள்ளில் நிறைந்து உள்ளது. கொள்ளை ரசமாக வைத்து சாப்பிட்டால் மிகுந்த நன்மை அளிக்கும் என சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.
உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

சீறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கும்

கொள்ளை நாம் தொடர்ந்து எடுத்து கொண்டால் நம் ரத்த அழுத்தம் சீரான அழுத்தத்தில் இருக்கும். மேலும் சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும். ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடுமையான உடல் உழைப்பிற்க்கு பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் குறைக்கும்.

ஊளை சதையை குறைக்கும்

கொள்ளுப் பருப்பை நீரில் ஊற வைத்து, அந்த நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம்.

மாதவிலக்கு சீராகும்

கொள்ளை நீரில் கொதிக்க வைத்து அந்நீரை அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்கள் பலப்படும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணில் ஏற்படும் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்,  மாதவிலக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும், அரிசியும் சேர்த்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.



சளியை விரட்டும்

குழந்தைகளுக்கு மழை காலங்களில் சளி பிடித்து இருக்கும்போது கொள்ளு சூப் செய்து கொடுத்தால் சளி பிரச்சனை உடனடியாக குணமாகும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களும் கொள்ளு சூப் குடிக்கலாம். 

மந்தத்தை போக்கும்

கொள்ளை அரைத்து பொடி செய்து, ரசத்தில் பயன்படுத்தி வரலாம். சிலருக்கு வாயு பிரச்சனையால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் கொள்ளை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி ஏற்படும்.


This post first appeared on Exprestamil, please read the originial post: here

Share the post

கொள்ளு பயறு மருத்துவ பயன்கள்

×

Subscribe to Exprestamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×