Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கம்பு


கம்பு

அரிசி, கோதுமை ஆகிய இரண்டும் தான் உலகில் உள்ள அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்கள் ஆகும். இந்த இரண்டை போலவே பல சத்துக்கள் நிறைந்த தானியமாக ‘கம்பு’ இருக்கின்றது. இந்த கம்பை கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என பலவகையில் பக்குவப்படுத்தி சாப்பிடலாம்.



கம்பு ஆங்கிலத்தில் ‘Pearl Millet’ என அழைக்கபடுகிறது. இது ஒரு புன்செய் நிலப்பயிராகும். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது. அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது.

கம்பின் வரலாறு

பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கருதப்படுகிறது. பின்பு ஆசிய நாடுகள், அமெரிக்கா நாடுகள் என பரவி இன்று சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவுப் பொருளாகப் விளைவிக்கபடுகிறது.. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு உணவு பொருளாகவும், கால்நடைத் தீவனமாகவும், மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.

கம்பில் அடங்கியுள்ள சத்துக்கள்

சிறு தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான ‘வைட்டமின் ஏ’ வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

100 கிராம் கம்பில் உள்ள சத்துக்கள்,
கால்சியம் - 42 கி, இரும்புசத்து - 12 மி.கி, வைட்டமின் பி - 0.38 மி.கி,
ரைபோபிளேவின் - 0.21 மி.கி, நியாசின் - 2.8 மி.கி உள்ளது.

மற்ற எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் இதில் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் ஆகும்.

கம்பின் மருத்துவ பயன்கள்


உயர் இரத்த அழுத்தத்தினை குறைக்கும்


கம்பில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

இரும்புச்சத்து நிறைந்தது


கம்பில் மிகவும் அதிக அளவில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் ஏற்படும் இரத்தசோகை மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

எளிதில் செரிமானம் ஆகும்

நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் செரிமானம் அடைய வேண்டும். கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில காலம் உண்டு வந்தால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் நீங்கும்.

மாதவிடாய் பிரச்னைக்கு தீர்வு

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சமயங்களில் அதிக ரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் கம்பு கூழ் அல்லது கம்பு சூப் குடித்து வந்தால்  மேற்கண்ட பிரச்சனைகள் தீரும்.

உடல் எடையினை குறைக்க உதவும்


கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து உள்ளது. இந்த கம்பங்க்கூழை குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். எனவே உடல் எடையினை குறைக்க விரும்புவார்கள் கம்பு உணவை தினமும் எடுத்து கொள்வது நல்லது.

குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படும்

மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு புற்று நோய்களில் அதில் ஒன்று தான் குடல் புற்றுநோய். கம்பு உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்


இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் வேலை மற்றும் உணவுமுறை காரணமாக உடல் சூடு பிரச்சனையால் அவதி படுகின்றனர். அதிகபடியான உடல் சூட்டின் காரணமாக பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகின்றனர். இவ்வாறு உடல் சூட்டால் அவதிபடுபவர்கள் தினமும் சிறிது அளவு கம்பு கூழ் குடித்து வந்தால் இவர்களின் உடல் சூடு தனியும். இதனால் உடல் குளிர்ச்சியடையும்.

சர்க்கரை நோயை தடுக்க உதவும்

கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால் இதனை உண்ணும்பொழுது உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் காக்க உதவும். எனவே தினசரி கம்பு உணவை உண்டு வந்தால் சர்க்கரை வியாதி ஏற்படாமல்  தடுக்கலாம்.

மலச்சிக்கலை போக்க உதவும்


தவறான உணவு பழக்கங்களின் விளைவாக இன்றைய காலகட்டத்தில் மலசிக்கல் மிகவும் மோசமான பிரச்சனையாக கருதப்படுகின்றது. காம்பில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இதனை உண்டு வரும்பொழுது மலசிக்கல் பிரச்சினை வராமல் முற்றிலுமாக தடுக்கின்றது.

இளமை தோற்றம் நீடிக்கும்

கம்பு அதிகம் உட்கொள்பவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்கள் ஆக்ஸிஜன் உறிஞ்சுவதை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கபடுகிறது. மேலும் தோல் பளப்பளப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. மேலும் முதுமை அடைவதை தாமதப்படுத்துகிறது.



This post first appeared on Exprestamil, please read the originial post: here

Share the post

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கம்பு

×

Subscribe to Exprestamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×