Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

திருக்குறள்-பதிவு-65


                       திருக்குறள்-பதிவு-65

வானியலாளர்,
கணிதவியலாளர்
பொருளியலாளர்
என பல்வேறுபட்ட
துறைகளில்
உயர்ந்த திறமைகளை
வெளிப்படுத்திய
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் கைகளில்
அவர் எழுதிய நூல்
வைக்கப்பட்ட பிறகு
சிறிது நாட்கள்
கழித்து அதாவது
1543-ஆம் ஆண்டு
மே மாதம் 24-ஆம் நாள்
இவ்வுலக வாழ்வை
நீத்தார் நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்.

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் இறந்தவுடன்
அவருடன் அவர்
கண்டுபிடித்த
சூரிய மையக் கோட்பாடும்
இறந்து விட்டது என்று
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினர்
நினைத்துக் கொண்டு
இருந்தனர்.

ஆனால்
கியோர்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் சூரிய மையக்
கோட்பாட்டை
நிறுவும் முயற்சியில்
இறங்கியவுடன் தான்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினர்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் சூரிய மையக்
கோட்பாடு அவருடன்
இறக்கவில்லை
இன்னும் இந்த
உலகத்தில் உயிரோடு
இருக்கிறது என்பதை
பல ஆண்டுகள் கழித்து
காலதாமதாகத் தான்
புரிந்து கொண்டனர்

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின்
அண்டக் கோள்களின்
சுற்றுகள் என்ற நூல்
1517-ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டு
13 ஆண்டுகள் கழித்து
1530-ஆம் ஆண்டு
எழுதி முடிக்கப்பட்டது

1530-ஆம் ஆண்டு
எழுதி முடிக்கப்பட்ட நூல்
13 ஆண்டுகள் கழித்து
1543-ஆம் ஆண்டு
பதிப்பிக்கப்பட்டது

1543-ஆம் ஆண்டு
பதிப்பிக்கப்பட்ட நூல்
73 ஆண்டுகள் கழித்து
1616-ஆம் ஆண்டு
தடை செய்யப்பட்டது

1616-ஆம் ஆண்டு
நூலிற்கு விதிக்கப்பட்ட
தடையானது
18-ஆம் நூற்றாண்டின்
இறுதிவரை
விலக்கப்படவில்லை

1616-ஆம் ஆண்டு
ரோமபுரியில் ஐந்தாம்
போப்பாண்டவர் பால்
(Pope Paul V)
நூல் பதிப்பு ஆசிரியர்
ஒருவருக்கு கடுமையான
ஓர் கண்டன
அறிக்கையை வெளியிட்டார்

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் எழுதிய
அண்டக் கோள்களின்
சுற்றுகள்
(Revolutions of the
Heavenly Globes)
என்னும் நூலில்
சொல்லப்பட்ட கோட்பாட்டை
உங்களது செய்தித்தாள்
வெளியிட்டிருப்பது
எங்களது கவனத்திற்கு
வந்துள்ளது சூரியன்
பிரபஞ்சத்தின் நடுவில்
அமர்ந்திருப்பதாகவும்
பூமி உள்பட மற்ற
கோள்கள் அதைச்
சுற்றி வருவதாகவும்
அந்த கோட்பாடு
தெரிவிக்கிறது

படைப்பின் கருத்தை
இந்த உலகத்திற்கு
எடுத்து உரைக்கும்
பைபிளைப் பின்பற்றும்
மதக்கோயில் உபதேசத்தை
அந்த கோட்பாடு
நேரடியாக எதிர்க்கிறது
தோற்ற அடிப்படைகளைக்
கூறும் வேதநூல்
பண்டைய டெஸ்டமன்ட்
(Book of Genesis)
பூமி தான் பிரபஞ்ச
மையம் சூரியன் இல்லை
என்று தெளிவாகக் கூறுகிறது

பைபிளை அவமதிக்கும்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் எழுதிய
அந்நூல் இன்றிலிருந்து
படிக்க படாத நூலாக
ஒதுக்கப்பட்டிருக்கிறது
அந்த நூலை ஆதரிப்போர்
கிறிஸ்தவ மதத்
துரோகியாகக் (Heres)
கருதப்பட்டுக் கடும்
தண்டனைக்குள்ளாவார்கள்
என்று அறிவிக்கிறோம்
மேலும், மரண
தண்டனையும்
விதிக்கப்படலாம் என்பது
நன்றாய் உமது நினைவில்
இருக்கட்டும்

இவ்வறிப்பைக்
கேள்விப்பட்டதும்
நீங்கள் இனிமேல்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் உடைய கருத்தை
உமது செய்தித் தாளில்
ஒரு போதும் பதிப்பிக்காமல்
உமது தவறைத்
திருத்திக் கொள்வீர் என்று
உறுதியாக நம்புகிறோம்
என்று சொன்னதிலிருந்து
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் கோட்பாடு
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினர் மீது
எவ்வளவு பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தி
இருக்கிறது என்பதை நாம்
தெரிந்து கொள்ளலாம்

1500 ஆண்டுகளாக
மக்களால் நம்பப்பட்டு வந்த
டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாட்டை
தவறு என்று சொல்லி
சூரியனை மையமாக
வைத்தே பூமி சுற்றுகிறது
என்ற சூரிய மையக்
கோட்பாட்டை இந்த
உலகத்திற்கு அளித்து
அறிவு விளக்கை
ஏற்றி வைத்த
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் அறிவு
விளக்கை மக்கள்
மத்தியில் கொண்டு
செல்வதற்கு அரும்பாடு
பட்டவர்கள் தான்
கியோர்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  08-12-2018
///////////////////////////////////////////////////////////


Share the post

திருக்குறள்-பதிவு-65

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×