Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

திருக்குறள்-பதிவு-57


                       திருக்குறள்-பதிவு-57

அந்தக் காலத்தில்
சர்வ வல்லமை
பெற்றிருந்தன
கிறிஸ்தவ
தேவாலயங்கள் ;
நாட்டை மன்னன்
ஆண்டாலும்
அந்த மன்னனையும்
ஆளும் வல்லமை
தேவாலயங்களுக்கு
இருந்தன ;
தேவாலயங்கள்
இட்டதே சட்டம்
என்று இருந்தது;

கிறிஸ்தவ
தேவாலயங்களை
எதிர்த்தோ ;
பைபிளில் உள்ள
கருத்துக்களை
எதிர்த்தோ ;
கிறிஸ்தவ
மதத்தை எதிர்த்தோ ;
யார் எதிர்த்து
எது பேசினாலும் ;
யார் எதிர்த்து
செயல்பட்டாலும் ;
அவர்களை தண்டிக்கும்
உரிமையை
தேவாலயங்கள்
பெற்று இருந்தன

கலிலியோவின் அன்பு
மகள் இறந்த போதும்
தீராத சோகத்தை
மனதில் தாங்கிக்
கொண்டு தன்னுடைய
ஆராய்ச்சிகளை
தொடர்ந்து செய்து
கொண்டிருந்த
கலிலியோவிற்கு
அளிக்கப்பட்ட
தண்டனையின்
கடுமையாக விதிகள்
கொஞ்சம் கூட
தளர்த்தப்படவிலை.
கலிலியோவிற்கு
எதிராக கடுமையான
விதிகள் மீண்டும்
கடுமையாக கடை
பிடிக்கப் பட்டு வந்தன

அதே கடுமையான
விதிமுறைகளைத்
தாங்கிக் கொண்டு
கலிலியோ
வீட்டுக் காவலில்
தன்னுடைய
ஆராய்ச்சியை
தொடர்ந்து செய்து
கொண்டு இருந்தார்

கலிலியோவினுடைய
கண்களின்
பார்க்கும் திறன்
கொஞ்சம் கொஞ்சமாக
குறையத் தொடங்கியது
கலிலியோ தன்னுடைய
கண்களுக்கு வைத்தியம்
செய்ய வேண்டும்
என்று ரோமபுரி
மடாதிபதிகளுக்கு
கோரிக்கை வைத்தும்
கலிலியோவினுடைய
கோரிக்கையை
ரோமபுரி மடாதிபதிகள்
ஏற்றுக் கொள்ளவில்லை

கலிலியோ
பைபிளுக்கு எதிராக
கருத்து சொன்னார்
என்ற காரணத்திற்காக ;
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டார்
என்ற காரணத்திற்காக ;
கலிலியோவின்
கண்களுக்கு
ரோமபுரி மடாதிபதிகள்
வைத்தியம் செய்ய
முடியாது என்று
மறுத்து விட்டனர்

நோயால் கொஞ்சம்
கொஞ்சமாக
பாதித்துக் கொண்டிருந்த
கலிலியோவின்
கண்களுக்கு
வைத்தியம் செய்ய
மாட்டோம் என்று
ரோமபுரி மடாதிபதிகள்
மறுத்து விட்ட போதும்
பார்வைத் திறன்
குறைபாட்டுடன்
கலிலியோ தன்னுடைய
ஆராய்ச்சிகளைத்
தொடர்ந்து செய்து
கொண்டு இருந்தார்

தன்னுடைய
வாழ்க்கையை ஆராய்ச்சி
செய்வதற்காகவே
செலவிட்டு ஆராய்ச்சி
ஒன்றையே தன் உயிர்
மூச்சாகக் கொண்டு
ஆராய்ச்சிகளைச் செய்த
கலிலியோவின் கண்கள் ;
எவ்வளவு
எதிர்ப்புகள் வந்தாலும்
எதிர்ப்புகளை பற்றிக்
கவலைப்படாமல்
அவைகளை எல்லாம்
எதிர்த்து நின்று
ஆராய்ச்சிகள் செய்த
கலிலியோவின் கண்கள் ;
உலகில் உள்ள
மொத்த கிறிஸ்தவ
மக்களும் எதிரியாக
நின்ற போதிலும்
எதைப்பற்றியும்
கவலைப் படாமல்
ஆராய்ச்சிகள் செய்த
கலிலியோவின் கண்கள் ;
தன்னுடைய செல்ல
மகள் வெர்ஜீனியா
இறந்த போதும்
ஆராய்ச்சிகள் செய்த
கலிலியோவின் கண்கள் ;
இந்த பிரபஞ்சத்தில்
உள்ள கோள்களின்
இயக்கங்களை தன்
கண்களால் பார்த்து
கோள்களின் இயக்கங்கள்
அதன் தன்மைகள்
ஆகியவற்றைப்
பற்றி பல்வேறு
உண்மைகளைச் சொன்ன
கலிலியோவின் கண்கள் ;
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
உண்மையை சொன்ன
கலிலியோவின் கண்கள் ;
இந்த உலகத்தை
பார்க்கும் திறனை
இழந்து விட்டன,.
ஆமாம்
கலிலியோவின் கண்கள்
குருடாகிப் போயின
ஆமாம் கலிலியோ
குருடராகிப் போனார்

உண்மையைக்
கண்டுபிடித்து
சொன்ன காரணத்திற்காக
குடும்பத்தை இழந்து
நிம்மதி இழந்து
மகளை இழந்து
இறுதியில்
கண்களையும் இழந்து
மிகுந்த துயரமான
நிலைக்கு
தள்ளப் பட்டாலும்
கலிலியோ கண்களை
இழந்த நிலையிலும்
தன்னுடைய
ஆராய்ச்சிகளைத்
தொடர்ந்து செய்து
கொண்டிருந்தார்

---------  இன்னும் வரும்
---------  25-11-2018
///////////////////////////////////////////////


Share the post

திருக்குறள்-பதிவு-57

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×