Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பெட்ரோல் விலை உயர்வு குறித்து நெட்டிசன்களின் கருத்துக்கள்! – பஸ் டிக்கட் ரேட்டையும் உயர்த்திட்டு பெட்ரோல் ரேட்டையும் உயர்த்துனா நாங்க எங்கையா போவோம்!

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படியே போனால் விரைவில் நூறு ரூபாயை எட்டி விடும் என்று வாகன ஓட்டிகள் வருத்தத்தையும் அதிருப்தியையும் தெரிவித்து வருகிறார்கள். அப்படி டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் பல இளைஞர்கள் தங்கள் வேதனையை கொட்டித் தீர்த்து விட்டார்கள்.

சில கருத்துக்கள் இங்கே:

  1. “சின்ன வண்டினாலும், மைலேஜ் நல்லா தருது டா” #XLsuper
  2. வரும் இடைத்தேர்தல்களில் பணத்துக்கு பதிலாக பெட்ரோல் கொடுத்து ஓட்டு கேட்க போறாங்க !

மன்மோகன் சிங் ஆட்சியிலும் பெட்ரோல் விலை 83 ரூபாய் தானே என்று நியாயம் பேசுபவர்கள் அப்போது கொள்முதல் விலை 145 டாலர் என்பதையும் இப்போது 77 டாலர் என்பதையும் வசதியாக மறந்து விடுகிறார்கள்!கேக்குறவன் கேனைன்னா…

  1. நிரந்தர தீர்வு எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல் தயாரிக்க 5 ஆலைகளை பெட்ரோலியத்துறை அமைத்து வருகிறது எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டர் ரூ.55க்கும், டீசல் லிட்டர் ரூ.50க்கும் விற்கப்படும் – நிதின் கட்கரி
  1. பெட்ரோல்,டீசல் விலை உயர்வு: ”வாய் திறந்து பேசுங்கள் மோடி”- ராகுல் காந்தி #

மோடி: இதுக்குத்தான் இந்த நாட்டிலேயே இருக்கறதில்லை. அடுத்த ஃப்ளைட் எத்தனை மணிக்கு?! வாய் திறந்து பேசினார் மோடி!

  1. 1000 ml பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் அரசியல்வாதிகள் 180 ml மதுபான விலையை கண்டிக்காமல் இருப்பது ஏனோ.. அதை தடை செய்ய சொல்லாமல் இருப்பது ஏனோ..
  2. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை! பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள் பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது?கச்சா எண்ணெய் விலை  $107 ஆக இருந்த போது விலை குறைவு. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை $ 78 ஆக இருக்கும் போது விலை உயர்வு! ஏன்? ஏன்?
  3. பெட்ரோல்,டீசல் விலையேற்றத்திற்கு மத்திய அரசு காரணமில்லை. மக்கள் பேருந்தில் போகாமல் இரு சக்கர,நான்கு சக்கர வாகனங்களை அதிக அளவில் வாங்கி  பயன்படுத்துவதே காரணம் என செல்லூரும் அடிமைகளும் இன்னும் சொல்லாததுதான் மிச்சம். பொண்ணுவீட்டுக்காரன் வரதட்சணையா வாங்கிதர்ற பைக்குக்கு பெட்ரோல் போடுற அளவுக்காகவாவது சம்பாதிக்கனும் போல.
  4. பெட்ரோல் விலை ஏறிவிட்டது என்று பந்த்து நடத்துவதற்க்கு பதிலாக ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலுக்கு அனுமதி கொடு என போராடலாமே??? ஏன் அரசியல் வியாபாரிகளுக்கு நஷ்ட்டம் வந்துடுமேனு பயமா..!!
  1. ஒரு 4km கடைசியா எப்ப நடந்தீங்க? நடப்பது கேன்சரை குணப்படுத்துமென்று தெரியுமா? நடப்பதற்கு தான் பகவான் கால்களை படைத்தார் என நம் மதம் சொல்வதை ஏன் மறந்தீர்கள்? நடப்பதை பறிகொடுத்து நிற்கும் கலாச்சார சீரழிவை தடுக்கவே பெட்ரோல் விலையை ஏற்றினார் மோடி என விளங்கவில்லையா?
  2. வண்டி வாங்குறத விட அதுக்கு பெட்ரோல் போட்றத நினைச்சா வண்டி மேல இருந்த ஆசையே போய்டுச்சு காலேஜ் படிக்கும் போது வீட்ல பைக் எடுத்து கேட்டன் ஆக்ஸிடன்ட் ஆகிரும் சொல்லி பயமுறுத்துனாங்க இப்போ எடுத்து கேட்டா பெட்ரோல் விலையை சொல்லி பயமுறுத்துராங்க * ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ2 குறைப்பு.
  3. விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் – முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.
  4. மத்திய , மாநில அரசுகள்  சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் – சிவகங்கையில் தினகரன் பேட்டி
  5. பெட்ரோல் டீசல் விலைக்கு BJP வரி உயர்வே காரணம்

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு

2014 ல் ரூ 9.20

2018 ல் ரூ 19.48

ஒரு லிட்டர் டீசல்

2014 ல் ரூ 3.46

2018ல் ரூ 15.33

அவ்வாறே VAT பெட்ரோலுக்கு 20% லிருந்து 27% ஆக உயர்வு

டீசலுக்கு 12.5% லிருந்து 16.75%+(25% Cess) ஆக உயர்வு.

இப்படி பல வித கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டாலும் அரசு அதை கவனத்தில் எடுத்துக் கொள்வது போல் தெரியவில்லை. பந்த் நடத்த திட்டம் போட்டவர்களை மிரட்டிக் கொண்டும் அதட்டிக் கொண்டும் திரிகிறது இந்த சர்வதிகார அரசு என்பதே பெரும்பாலான சாமான்யனின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது.

ஆந்திர மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப் படும் என்று அந்த மாநில முதல்வர் தெரிவித்து இருக்கிறார். ஆக மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்வு குறித்தான பிரச்சினை தலை விரித்து ஆடுகிறது. அரசோ எதிலும் தலையிடாமல் மௌனம் காத்துக் கொண்டே இருக்கிறது.  என்ன ஒரு வில்லங்கத் தனம்!

The post பெட்ரோல் விலை உயர்வு குறித்து நெட்டிசன்களின் கருத்துக்கள்! – பஸ் டிக்கட் ரேட்டையும் உயர்த்திட்டு பெட்ரோல் ரேட்டையும் உயர்த்துனா நாங்க எங்கையா போவோம்! appeared first on TON தமிழ்.



This post first appeared on Tamil News Online, please read the originial post: here

Share the post

பெட்ரோல் விலை உயர்வு குறித்து நெட்டிசன்களின் கருத்துக்கள்! – பஸ் டிக்கட் ரேட்டையும் உயர்த்திட்டு பெட்ரோல் ரேட்டையும் உயர்த்துனா நாங்க எங்கையா போவோம்!

×

Subscribe to Tamil News Online

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×