Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

முதலிரவு அமைதியாக சில டிப்ஸ்

திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது.யார் மூலமாகவோ கிடைக்கிற அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன. இதனாலேயே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது.

அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்….

முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை. கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது.

இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில் ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம்.

முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள் ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும்.

அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். உறவை பலப்படுத்தும்.

எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக்கு இடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை….!


This post first appeared on First Night Stories, please read the originial post: here

Share the post

முதலிரவு அமைதியாக சில டிப்ஸ்

×

Subscribe to First Night Stories

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×