Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மஹாபாரதம் - பெரிய கதைங்கோ..

ரொம்ப மாதங்களாகவே வியாசரின் மஹாபாரதம் வாசிக்க வேண்டுமென்ற ஆவல் நிறையவே இருந்து வந்தது.இணைய முழுவதும் தேடி ஆங்கில பதிப்பு கிடைத்தாலும் அதை டவுன்லோடு போட்டாலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் முற்றிலும் இல்லை (இங்கிலிஷ் தெரியாதுனு இல்லங்க).. என்னதான் ஆங்கில நாவல், புக்ஸ் படித்தாலும் மஹாபாரதம் மட்டும் தமிழில்-தான் ரசிக்க வேண்டும் எண்ணம் எனக்குள்.


அந்த வரிசையில் நாராயணன் மீது பாரத்தை போட்டு இன்னொரு ரவுண்டு இண்டெர்னெட்டில் வலம் வர, ஆச்சரியமாக அந்த வியாச பாரதம் முழுமையான தமிழ் மொழிப்பெயர்ப்பில் சுமார் 6000 பக்கங்கள் கூடிய இ-புக் கிடைச்சதுங்க..சுமார் 900 MB இருக்கும்..படிக்கலாமுனு ஆரம்பிக்க கணினி படுத்துருச்சி.ரீ ஃபோர்மட் பண்ண வேண்டிய கட்டாயம்..பேக் காப்பும் பண்ணாது போனதால மொத்த ஃபைலும் அம்பேல்..

சரி போனால் போகட்டும் போடா என்று மீண்டும் இணையத்துக்கு வந்தால் அங்க இருந்த எல்லா டவுன்லோடு லிங்க்கும் இறந்துப் போச்சுங்க..என்னடா நாராயணா சோதனை-னு முகத்துல கைய வச்சு தேடுனேன்..தேடினேன் தேடினேன் தேடி தேடி தேய்ந்தேன், பாரதம் என்னும் அமுதம் பருக இனி பாக்கியமில்லையோ என நூடல்ஸூம் ஆனேன்.

சரி நமக்கு வாய்ச்சது ஆங்கிலம்-தானு திறக்க போகவே, திடீர்னு ஒரு பிளாக், அங்க அவர் வாசித்த புத்தகங்களின் தரவிறக்க லிங்கை அளித்திருந்தார்.அதில் தேடவே மஹாபாரதம் என்ற பேரில் ஒரு PDF. வியாச பாரதமோ என்ற எதிர்ப்பார்க்க எழுத்தில் "வான்மிகீயூர் மஹாபாரதம்" என இருந்தது.அது அந்த பிளாக் உரிமையாளர் உருவாக்கிய புத்தகம் என்பதை பின்புதான் அறிந்தேன்.(பிளாக் லிங்க் மேலே இருக்குங்க)


சுமார் 200 பக்கங்கள் உள்ள புத்தகம் அது, அவரது பேருதவியால் ஏதோ படித்து முடித்தேன்.மஹாபாரத கதையின் சுருக்கம்தான் அப்புத்தகம் என்றாலும் விரிவாகவே பல கதைகள் எழுதப்பட்டிருந்தன.புத்தகத்தின் இறுதி பக்கங்களில் கவிஞர் கண்ணதாசன் மகாபாரதம் பற்றி கூரிய வார்த்தைகள் சில இடம் பெற்றிருந்தன.அதோடு கதைகளில், கதாபாத்திரங்களில் இடம் பெற்ற சில நன்னெறி, நல்ல விஷயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.மொத்தத்தில் எல்லாமே ரொம்ப எளிமையாக அறிந்துக்கொள்ளக்கூடிய வண்ணமே இருந்தது.

வான்மிகீயூர் LL சங்கர் அவர்களுக்கும் பல நன்றிகள்.

இனி பாரத கதையின் ஆங்கிலத்தையும் ஒரு முறை படித்துவிடலாம் என முடிவு செய்துள்ளேன்..ரொம்ப நாள் ஆகலாம்..டைம் கிடைத்தால், அந்த பெருமாளின் ஆசிர்வாதம் இருப்பின் கண்டிப்பா முடிச்சிருலாம் என்ற நம்பிக்கை உண்டு.பாரத கதையை படிக்க விரும்புவர்கள் மேலே உள்ள புத்தகம் கண்டிப்பா படிக்கலாம்.அதுவும் என்னை போல முதன் முதலாக பாரதம் படிக்க ஆர்வமுள்ளோருக்கு ஒரு ஆரம்பமாக இருக்கலாம்.மீண்டும் அடுத்த பதிவில் ஏதாவது ஒன்றோட மீட் பண்ணலாம்.அதுவரை

Share the post

மஹாபாரதம் - பெரிய கதைங்கோ..

×

Subscribe to Kumaran's கனவுகள் ஆயிரம்..

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×